ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

ஆன்மீகம்

ஆன்மீகத்தின் அடிப்படை என்ன என்பது நான் சில நேரங்களில் யோசிப்பது உண்டு. அப்பொழுது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி எனக்கு அடிப்படை கேள்வியாகத் தோன்றவில்லை. மாறாக, மனிதன் வெறும் ஒரு இயந்திரமா அல்லது நமக்குள் உடல் போக ஆன்மா என்ற நாம் பொதுவாக வர்ணிக்கும் ஒன்று இருக்கிறதா என்பதே அடிப்படை கேள்வியாகத் தோன்றுகிறது. கடவுள் இருந்தும் நாம் அவர் இயக்கும் ஆன்மா இல்லாத இயந்திரங்களாக மட்டும் இருந்தோமானால், ஆன்மீகம் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

ஆக, கடவுளை நம்பாதவன் ஆனால் மனித வாழ்க்கை வெறும் இயந்திர வாழ்க்கை அல்ல என்று நம்புபவன் ஆன்மீகவாதியாக இருக்க இயலும். 

3 கருத்துகள்:

  1. ஆன்மீகம் குறித்த அருமையான அறிவியல் பூர்வமான சிந்தனை. கடவுளை நம்பாதவனும் ஆன்மீகத்தை கடை பிடிப்பவனாக இருக்கலாம். ஆனால் ஆன்மீகத்திற்காக வாதிடுபவர்கள் மட்டுமே ஆன்மீகவாதிகளாக இருக்க இயலும்.எப்போதும் நன்மையும் நலனும் விளைவது நல்லவற்றை கடைபிடிப்பவர்களுக்கு மட்டுமே. வாதிடுபவர்களுக்கு என்றுமே பொருளாதார அளவிலான பயன் மட்டுமே கிட்டும்.
    அன்புடன்
    குமரி எஸ். நீலகண்டன்

    ஃப

    பதிலளிநீக்கு