புதன், 25 ஆகஸ்ட், 2010

கவலை கணக்கு

ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு கவலைகள் வரும்போது ஒரு நோட் புக்கில் அவற்றை எழுதிக்கொண்டே வாருங்கள். பிறகு 10-15 நாட்கள் கழித்து அந்த நோட் புக் கையில் எடுத்து நீங்கள் அன்று கவலைப்பட்டது நியாயமாக இருந்ததா என்பதைப் பாருங்கள். பெரும்பாலும் நாம் காரணம் இல்லாமல் கவலைப்பட்டோம் என்பதே தெரிய வரும்.

அலுவலகம் போய்ச் சேர தாமதம் ஆகிவிட்டதே என்று இடித்துக்கொண்டே போவோம். ஆனால், அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்த பிறகு அதிகாரி உடம்பு சரி இல்லாததால் இன்று அலுவலகம் வருவதாக இல்லை என்று தெரிய வரும். அப்பொழுது நாம் கஷ்டபட்டு வந்தது என்னமோ அவரால் வீணாகப் போய்விட்டதுபோல் நமக்கு அவர் மீது கோபம் வரும்.

இரண்டு கணினிகள் பக்கத்து பக்கத்தில் உள்ளன என்று வைத்துக்கொள்வோம். இரண்டுக்கும் processing capacity சரி சமமாக உள்ளது. ஆனால், ஒரு கணினி எப்பொழுதும், "என்னால் செய்ய முடியுமோ? ஒருவேளை நான் தப்பு தப்பா செய்துவிடுவேனோ? என்னை மூடி பக்கத்திலுள்ள கணினியை மட்டும் வைத்துக்கொள்வார்களோ?" என்று கவலையில் இருக்கிறது. அதன் பாதி processing capacity இவ்வாறு கவலைப்படுவதிலேயே வீணாகிவிடுகிறது. ஆகவே, அதன் செயல்பாடுகளின் தரம் அரைகுறையாகிவிடுகிறது.

கணினி போல்வே, நாம் கவலைப்படும்போது நம் மூளை நாம் செய்கின்ற காரியத்தை முழுமையாக கவனிக்க முடியாமல் அதன் தரம் அரைகுறையாகிறது. பிறகு பக்கத்திலுள்ளவர் நம்மைவிட நன்றாக செய்வதால் நம் கவலைகள் இன்னும் அதிகம் ஆகிவிடுகின்றன.

4 கருத்துகள்:

  1. http://ta.indli.com/
    please add your postings in this website,so that many other able to read your blog.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் தளம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி விட்டது... இன்னும் இடுகைகள் சேர சேர அண்ணா சாலை டிராஃபிக் இங்கு எதிர்பார்க்கலாம்...
    குமரி எஸ். நீலகண்டன்

    பதிலளிநீக்கு
  3. செந்தில் அவர்களே, பாராட்டுக்கும் ஆலோசனைக்கும் நன்றி.

    நீலா, நீங்கள் ஊக்குவிக்கும் முறை வித்தியாசமானது.

    பதிலளிநீக்கு