ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

விலையும் மதிப்பும்

விலை என்பது நாம் சந்தையில் ஒரு பொருள் வாங்க-விற்க கொடுக்கும்-வாங்கும் காசளவு. மதிப்பு என்பது ஒரு பொருள் நமக்கு எவ்வளவு முக்கியமானதாக உள்ளது என்பதை குறிக்கும். விலை சந்தையில் கொடுக்கல்-வாங்கல் திட்டத்தை தொடர்புடையது; மதிப்பு பொதுவாக நமது உணர்வுகளோடு இணைந்துள்ளதாகும். விலையை நாணயமாக குறிப்பிட முடியும்; ஆனால், உணர்வுகளுக்கு எந்த நாட்டிலும் நாணயம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் மதிப்பு ஒருவரின் உணர்வுகளோடு மட்டுமே தொடர்புடையதாக இருக்கும் பட்சத்தில் அதை நாணயமாக கணக்கிட முடியாது.

ஒரு வயதானவர் வசிக்கும் பாழாய் போன ஒரு வீட்டின் விலை 50 லட்சம். ஆனால், அதை எவ்வளவு விலை கொடுத்தாலும் அவர் விற்க தயாராக இல்லை. அவரது முன்னோர்கள் பல தலைமுறைகளாக வசி\த்து வந்த அந்த வீட்டில் தனக்கு உயிர் போக வேண்டும் என்று அவருக்கு ஆசை.

அவருக்கும் அவர் மகனுக்கும் அடிக்கடி சண்டை நடக்கிறது. மருத்துவராகிய மகன் தான் நடத்தி வரும் தனியார் மருத்துவமனையை விரிவுபடுத்த வீட்டை இடிக்க விரும்புகிறார், ஆனால் வயதான அப்பா, "நால்-ஐந்து வருடங்களாக பொறுத்துக்கோ. நான் போன பிறகு என்ன வேணுமானாலும் செய்ய" என்கிறார். 

இந்த தகராறில் வீட்டின் சந்தை விலை 50 லட்சமாக இருந்தாலும், மகன் அவர் சம்பாதிக்கப் போகும் பணத்தைக் கணக்கிட்டு அந்த வீட்டின் மதிப்பு கோடி-கோடியாக கருதுகிறார். அப்பாவின் கணக்கில் அந்த வீட்டிற்கு நாணயமாக விலை நியமிக்கவே முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக